Ind Vs SL கிரிக்கெட் போட்டி இன்று (ஜீலை 18, 2021) நடைபெற உள்ளது. கொரோனா தன் பிடியை தளர்த்தினாலும், போட்டி நடக்கும் கொழும்புவில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என நம்பப்படுகிறது.
INDIA TOUR OF SRI LANKA :
![]() |
SL Vs Ind |
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மொத்தம் 159 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதுவே ஒரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக விளையாடிய ஒரு நாள் போட்டி ஆகும். மேலும் இந்தியா அணி இலங்கைக்கு எதிராக 93 போட்டிகளில் வென்று உள்ளது.
INDIA VS SRI LANKA SCHEDULE :
ஆறு போட்டிகள் கொண்ட இந்தியா எதிர் இலங்கை தொடர் ஜீலை 13 ஆம் தேதி நடக்க இருந்தது, ஆனால் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக தொடர் ஜீலை 18 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி முதல் ஒரு நாள் போட்டி ஜீலை 18ம் தேதியும், இரண்டாம் ஒரு நாள் போட்டி ஜீலை 20ம் தேதியும், மூன்றாம் ஒரு நாள் போட்டி ஜீலை 23ம் தேதியும் நடைபெறும். அதேபோல் முதல் டி-20 போட்டி ஜீலை 25ம் தேதியும், இரண்டாம் டி-20 போட்டி ஜீலை 27ம் தேதியும், மூன்றாம் டி-20 போட்டி ஜீலை 29ம் தேதியும் நடைபெறும்.
SRI LANKA ABSENCE PLAYERS :
வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்னாண்டோவும் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக வெளியேறியுள்ளார். சீனியர் வீரரான திசாரோ பெரேரோவும் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியா VS இலங்கை தொடரில் இருந்து நட்சத்திர வீரர்கள் வெளியேறியுள்ளதால் பலம் பொருந்திய இந்திய அணியை எவ்வாறு எதிர் கொள்ளும் என்று கேள்விக்குறியாகி உள்ளது.
IND VS SL MATCH BROADCAST :
இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறும்.
இந்தியா VS இலங்கை போட்டியின் Toss இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போடப்படும்.
இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.
இப்போட்டியின் LIVE SCORECARD ஐ நமது newstamil25.blogspot.com தளத்தில் காணலாம்.
இப்போட்டியை தமிழில் காண SONY TEN 4 ஐ தேர்வு செய்யவும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டியின் நேரலை SONY SPORTS NETWORK ல் ஒளிபரப்பப்படும். மேலும் SONYLIV செயலியிலும் இப்போட்டியை காணலாம்.